Skip to main content
Bluvy Tube
Daily Dews of Hope

Daily Dews of Hope

@dailydewsofhope.bsky.social

Daily Dews of Hope posts devotionals to help you refresh, refocus, and renew your faith and hope in Jesus Christ.

63 videos published

Subscribe Message

நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர். - புலம்பல் 3:57 விசுவாசத்தோடே தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்; பயம் நிறைந்த தருணங்களில் அவர் பிரசன்னம் உங்களை காத்திடும். தேவ பிரசன்னம் உங்களை ஸ்திரப்படுத்தட்டும். #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope post.dewsofhope.ca/325t

0 views

…உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். - சங்கீதம் 145:18 - கஷ்டங்கள் நம் பார்வையை மறைக்கக்கூடும், தேவனின் வாக்குறுதியோ நிலைத்திருக்கும். உண்மையான நம்பிக்கையுடன் சர்வவல்ல கர்த்தரை நெருங்கி வாருங்கள். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி post.dewsofhope.ca/324t

0 views

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக. - நீதிமொழிகள் 3:3 - தேவையிலிருப்பவர்களிடம் கருணை காட்டுங்கள், கிருபையுடன் உண்மையைப்பேசுங்கள், உங்கள் அனைத்து முயற்சிகளிலும் நீதியைப் பின்பற்றுங்கள். அன்பும், உண்மையுள்ளமும், உங்கள் அன்றாட வாழ்வின் நடைமுறையாக மாறட்டும் - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி

0 views

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். - நீதிமொழிகள் 18:10 -- ஜெபத்தில் பொறுமையுடன் கர்த்தரின் நேரத்திற்காக காத்திருங்கள். சர்வவல்ல கர்த்தரிடத்தில் உங்கள் அடைக்கலத்தையும் இரட்சிப்பையும் கண்டடையுங்கள். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி post.dewsofhope.ca/t322

0 views

…நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. - கலாத்தியர் 1:10 - கர்த்தரின் உண்மைக்கு சான்றாக உங்கள் வாழ்க்கை, மற்றோருக்கு நம்பிக்கையையும் ஒளியையும் வழங்கட்டும். கிறிஸ்து மேலுள்ள விசுவாசமே உங்கள் முடிவுகளை வழிநடத்தட்டும். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி

0 views

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். - சங்கீதம் 13:6 - நன்றியுணர்வுள்ள இதயம், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்த்தரின் கரத்தைப் பார்க்க உதவுகிறது. எந்நிலையிலும் தேவனைத் துதிப்பதையே உங்கள் இயல்பாகக் கொள்ளுங்கள். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope post.dewsofhope.ca/320t

0 views

…நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் - ஏசாயா 46:4 - இதுவரை உங்களை பாதுகாத்த சர்வவல்ல கர்த்தர், இனியும் வழிநடத்துவார். தம் பிள்ளைகளை உண்மையுடன் நேசிக்கும் சிருஷ்டிகரை முழுமையாக நம்புங்கள். - #DailyDewsofHope

0 views

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். - சங்கீதம் 73:26 - சோர்வு உங்கள் பார்வையை மறைக்கும்போது, கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவருடைய பிரசன்னம் முன்னே செல்லும் பாதையை ஒளிர செய்யும். கர்த்தரையே நிலையான பங்காகக் கொள்ளுங்கள்.

0 views

…உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. - சங்கீதம் 119:50 - ஜெபம்: அன்புள்ள கர்த்தரே, நீர் அருளும் அளவற்ற சமாதானத்திற்காக நன்றி. உம் வார்த்தையைப் புரிந்து, அதை முழுமையாக விசுவாசிக்க உதவும். இந்த இக்கட்டான சூழலில் என்னைத் தாங்கி, சவால்களை முறியடிக்க வழி காட்டும். ஆமென். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி

0 views

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக- சங்கீதம் 20:4 - நீங்கள் தேவனுடைய வழிகளில் நடக்கையில் அற்புதங்களாலும் அடையாளங்களாலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்கள் விருப்பங்களை மனதாரக் கர்த்தரிடம் ஒப்படைத்து காத்திருங்கள். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி

0 views

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்… - ஏசாயா 54:17 - ஜெபம்: அன்புள்ள கர்த்தரே, அச்சுறுத்தலில் எனக்கு அடைக்கலமாயிரும். உம்மிலே பாதுகாப்பைத் தேடும் ஞானத்தையும், சத்தியத்தை பேச தைரியத்தையும் தந்தருளும். என் உள்ளத்தைக் கசப்பிலிருந்து காத்தருளும். ஆமென். - #DailyDewsofHope

0 views

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். - 2 கொரிந்தியர் 5:6 - எல்லாப் பதில்களும் கிடைக்கும்வரை காத்திராமல், விசுவாசத்துடன் முன்நடங்கள். கிறிஸ்துவில் நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #faith #hope #discipline post.dewsofhope.ca/314t

0 views

கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர். - யாத்திராகமம் 15:2 - இன்று, பெற்ற ஒரு நன்மைக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். நன்றிப்பாடலுடன் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion post.dewsofhope.ca/313t

0 views

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்- 2தெசலோனிக்கேயர் 3:3 - கர்த்தரை மட்டுமே விசுவாசியுங்கள். அவருடைய பலத்தை சார்ந்து, அவருடைய சத்தியத்தில் நிலைத்திருங்கள். தம் பிள்ளைகளைப் பலப்படுத்தும் உண்மையுள்ள கர்த்தரில் நம்பிக்கையோடிருங்கள். -

0 views

...கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்- நெகேமியா 8:10 - உங்கள் சூழ்நிலைகளே உங்கள் பலத்தின் ஒரே ஆதாரமாக இருக்க வேண்டியதில்லை. ஆண்டவருடைய பிரசன்னத்தில் களிகூருங்கள். எல்லாம் வல்ல ஆண்டவர் உங்களைப் பலப்படுத்துவாராக. - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope post.dewsofhope.ca/311t

0 views

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.- ஏசாயா 35:3 - லிமையுற்றோருக்கு, அன்பினாலே உங்களால் இயன்ற உதவி செய்து, பொறுமையான ஜெபத்தினால், அவர்களை அன்பான கர்த்தரை நோக்கி வழிநடத்துங்கள். கர்த்தருடைய பெலத்தினால், சோர்ந்திருக்கும் மற்றொரு இதயத்தை அன்பால் ஊக்குவியுங்கள். -

0 views

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது- சங்கீதம் 118:1 - ஒரு சிறிய நன்மையை நினைத்து நல்லவராகிய கர்த்தரைத் துதியுங்கள். என்றும் நிலைக்கும் நம்பிக்கையின் ஆதாரமாகிய கர்த்தரின் அன்பிற்காக நன்றி செலுத்துங்கள் - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope post.dewsofhope.ca/309t

0 views

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.- யோசுவா 1:5 - நீங்கள் கைவிடப்பட்டதாக உணரவேண்டாம். உங்களை நினைத்திருக்கும் கர்த்தரிடம் திரும்புங்கள். வல்ல கர்த்தரை மட்டுமே முழுமையாக நம்புங்கள், ​​அவர் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார் - #அனுதினநம்பிக்கையின்பனித்துளி post.dewsofhope.ca/308t

0 views

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்..- வெளிப்படுத்தின விசேஷம் 3:19 - ஆண்டவரின் கண்டிப்பை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அது தீமையிலிருந்து விலகி அவருடன் நடக்கும்படி உங்களுக்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பாகும். ஆண்டவரின் புதுப்பிக்கும் கிருபையில் முன்னேறி செல்லுங்கள்

0 views

...நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். - எபிரெயர் 12:28 - ஆண்டவரை பக்தியுடன் ஆராதித்து, உங்கள் பணியில் அவருக்கு உண்மையுடன் சேவை செய்யுங்கள். உங்கள் நம்பிக்கை தேவனின் நிலையான ராஜ்யத்தில் வேரூன்றியிருக்கட்டும். - post.dewsofhope.ca/306t

0 views

உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்- சங்கீதம் 81:16 - நீடித்த திருப்தி என்பது ஆண்டவரிடம் திரும்புவதிலிருந்தே தொடங்குகிறது. கர்த்தருடைய பராமரிப்பில், அவருடைய வழிகளில் நடங்கள். ஆண்டவரிடம் நிலைத்திருந்து, அவரில் நீடித்த திருப்தியைக் கண்டடையுங்கள்.

0 views

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். 📖சங்கீதம் 57:2 - உங்கள் காரியத்தை தேவனிடம் ஒப்படைத்து நேர்மையுடன் நடந்து நம்பிக்கையுடன் காத்திருங்கள். இதை நினைவில் கொள்ளுங்கள் - உன்னதமான தேவன் தம்முடைய பரிபூரண வழியில் உங்களைத் தாங்கி, உங்களுக்கு நீதி வழங்குவார்.

0 views

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; 📖சங்கீதம் 118:6 - நீங்கள் தேவனுடைய அன்புக்குரிய பிள்ளை. ஆவியானவரின் வல்லமை, அன்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்லுங்கள். சர்வவல்ல கர்த்தரை நம்புங்கள்; அவருடைய பிரசன்னம் உங்களைத் தாங்கும். - post.dewsofhope.ca/252t

0 views
Page 1 / 2 Next
Link copied to clipboard

Sign in

Time to take a break

You've been watching videos for 30 minutes straight: give yourself 5 minutes away from the screen. Stand up, stretch, grab a glass of water… Your videos will be right here when you're back.